
நாராயணா நமோ நாராயணா
நாராயணா நமோ நாராயணா
நினைத்தாலே வருவாயே நாராயணா
நலம் யாவும் தருவாயே நாராயணா
நிலை மாறாத வரம் வேண்டும் நாராயணா
வரம் வேண்டும் நாராயணா
அருளாளன் நீ எந்தன் அகந்தை நீக்கி
ஆசைகள் பந்தங்கள் பலவும் பூக்கி
ஒரு நாள் உந்தன் தாளில் சேர்த்திடவே
விரைவாக வந்தெம்மை காத்தருள்வாய் காத்தருள்வாய்
பால் அலைகள் மீது பால்லி கொண்டாய்
புவன்களை பாலித்து பேணுகிறாய்
கார்முகில் அமுதாக பொழிகின்றாயே
கடல் வாழும் மண் வாழும் உயிர்கள் வாழ உயிர்கள் வாழ
மலர்மீது பாதங்கள் பதிந்து நின்றாய்
வானோங்கி வளர்ந்து பின் மறைந்தே போனாய்
நேர்கதி மாறாமல் சுழன்றிஎங்கும்
ஞாலங்கள் உன்னையே சுற்றி வரும் சுற்றி வரும்
வான்கறுத்து உனைப்போல உருவம் கொள்ளும்
வீசுகின்ற காற்றும் உன் பெயரை சொல்லும்
நீர் நெருப்பு நிலமெல்லாம் நீ தானன்றோ
நாளும்நீ கோளும்நீ திசையும் நீயே திசையும் நீயே
ஊன் உயிர் உணர்வெல்லாம் நீயே ஆனாய்
நான் எனது மதெல்லாம் உணதல்லவோ
நான் வேறு நீ வேறு பிரிவதுண்டோ
நீயன்றி எமக்கிங்கே கதி வேறுண்டோ டோ கதி வேறுண்டோ
அயனோடு தேவாதி தேவர்களும்
ஆன்ம நேர்யர்களும் நலாயர்களும்
விஷ்ணு கிங்சரம் வார்த்தையால் குடி புகுந்தார்
திருநாராயணனின் தாளில் அடிபுங்குந்தார் அடிபுகுந்தார்
- கி. கஸ்தூரிரங்கன்
அமுதசுரபி தீபாவளி இதழ் 2009
No comments:
Post a Comment